என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொழிலாளர்கள் மகிழ்ச்சி"
- ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இணை யதளம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
- கடந்த 2021-ம் ஆண்டு தமிழக அரசு புவிசார் குறியீடு வழங்கியது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்கு றிச்சி, தென்கீரனூர், ஜே.ஜே நகர், சின்னசேலம், நைனார்பாளையம், தகடி, கூத்தனூர், திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டு காலமாக மரச் சிற்பங்களை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மரத்தாலான சாமி சிற்பங்கள், பூஜை அறைக்கு தேவையான சிற்பங்கள், கோவில் மற்றும் பூஜை அறை கதவு, கோவில் தேர் உள்ளிட்ட கலை அழகு மிகுந்த மரச் சிற்பங்கள் செய்யப்படுகிறது. இந்த மரச்சிற்பங்களை தமிழகத்தைச் சேர்ந்த பலரும் வாங்கிச் செல்கின்றனர். அது மட்டும் இன்றி ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இணை யதளம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில வெளிநாட்டவர்களும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்த மரச்சிற்ப தொழிலுக்கு கடந்த 2021-ம் ஆண்டு தமிழக அரசு புவிசார் குறியீடு வழங்கியது.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மர சிற்பம் செதுக்கும் கலைஞர்களுக்கு அவர்களின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் ரூ.50 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அரசு மானியத்துடன் நவீன தொழில்நுட்ப எந்திரங்களைக் கொண்ட ஒரு பொது வசதி மையம் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளார். இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மரச் சிற்ப தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி மரச் சிற்பம் தயாரிப்பு கைவினைத் தொழிலாளர்கள் தொழில் கூட்டுறவு சங்க தலைவர் சக்திவேல் கூறியதாவது,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மரச் சிற்பம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் மரச் சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாக, கலைவண்ணம் மிகுந்து காணப்படும். இதனால் மரச்சிற்பத்திற்கு தமிழக அரசின் புவிசார் குறியீடை பெற்றுள்ளோம். இங்கு தயாரிக்கப்படும் மரச்சிற்பங்கள் ரூ. 3 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் தமிழக அரசு மர சிற்ப தொழிலாளிகள் பயனடையும் வகையில் ரூ. 50 லட்சம் மதிப்பில் தொழில்நுட்ப எந்திரங்களை கொண்ட வசதி மையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் பயனடைவார்கள் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். எனவே இந்த அறிவிப்பு மரச்சிற்ப தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என கூறினார்.
- சட்டம், ஒழுங்கு பிரச்சினைக்காக அனைத்து வகை கடைகளும், இரவு 11 மணிக்கு மேல் மூடப்பட வேண்டும்.
- பணி முடிந்துதாமதமாக வெளியேறும் தொழிலாளர், உணவு, சிற்றுண்டி கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகரம் சர்வதேச பின்னலாடை சந்தைகளில், அசைக்க முடியாத முக்கிய இடத்தில் இருக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் திருப்பூர் மாவட்டத்தில் 21 மாநிலங்களை சேர்ந்த 2.20 லட்சம் பேர் தொழில் நிமித்தமாக வசிப்பது, கொரோனா கால கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது.
தமிழகத்தின் 39 மாவட்டத்தை சேர்ந்த மக்களும் வசிக்கின்றனர்.தமிழகத்தின் தூங்கா நகரமாக இருப்பது மதுரை. தென்மாவட்டங்களை மாநிலத்தின் பிற மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய இடமாக இருப்பது மதுரை. பின்னலாடை ஏற்றுமதி வர்த்த்கமும், உள்நாட்டு பனியன் உற்பத்தியும் வேகமாக வளர்ச்சி பெற்ற போது திருப்பூர் நகரமும், தூங்கா நகரமாக மாறிக்கொண்டிருந்தது. ஊரடங்கு வந்த பிறகு, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
சட்டம், ஒழுங்கு பிரச்சினைக்காக அனைத்து வகை கடைகளும், இரவு 11 மணிக்கு மேல் மூடப்பட வேண்டும் என்பது போலீசாரின் உத்தரவு. அப்படியிருந்தும் 12 மணி வரை சில கடைகள் மறைமுகமாக இயங்கின. அதிகாலை, 4 மணிக்கு ஓட்டல், பேக்கரிகள் திறக்கப்படுகின்றன. இடையே நான்கு மணி நேரம் மட்டுமே மூடப்படுகிறது.திருப்பூரில் வசிக்கும் வெளி மாவட்ட தொழிலாளர், தற்காலிகமாக வாடகை அறையில் தங்கி, ஓட்டலில் சாப்பிடுகின்றனர்.
பனியன் நிறுவனங்களில் 12 மணி வரை உற்பத்தி தொடர்ந்தால் அதுவரை பேக்கரி - டீ கடைகளின் தேவையும் இருக்கிறது. கடைகள் 11 மணிக்கு மூடப்படுவதால் பல வகையில் வெளிமாநில தொழிலாளர் பாதிக்கப்பட்டனர்.தமிழக அரசு மீண்டும் 24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம் என அனுமதி அளித்துள்ளது. தொழிலாளர் சமூக பாதுகாப்பு குறித்து தொழிலாளர் துறையும் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இத்தகைய அறிவிப்பு, தொழிலாளர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
பணி முடிந்துதாமதமாக வெளியேறும் தொழிலாளர், உணவு, சிற்றுண்டி கிடைக்காமல் அவதிப்பட்டனர். அனைத்து கடைகளும்24 மணி நேரமும் திறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டாலும், ஓட்டல், சிற்றுண்டி விற்கும் தள்ளுவண்டிகள், நடமாடும் டீக்கடைகள், பேக்கரிகள் மட்டுமே அதிக அளவு திறந்திருக்க வாய்ப்புள்ளது.
தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதும். பர்னிச்சர் கடைகளும் பரபரப்பாக காணப்படும். பூ மார்க்கெட், பழக்கடைகளும், பழமுதிர்நிலையங்களும் மூடப்படும் வரை கூட்டமாக இருக்கும். இனி இரவு முழுவதும் கடை இயங்கலாம் என்பதால், பண்டிகைகால நெருக்கடிகள் குறைய வாய்ப்புள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்